×

நேர்மை, இரக்கம், அகிம்சை போன்ற இந்தியாவின் மதசார்பற்ற விழுமியங்களில் எனக்கு மரியாதை உண்டு :தலாய் லாமா

ஷிம்லா : திபெத் மக்களின் ஆன்மீக தலைவரான தலாய் லாமாவின் 86வது பிறந்த நாளை அவரது பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கி இருந்தபடி தலாய் லாமா ஆன்மீக பணிகளை செய்து வருகிறார்.இன்று அவருக்கு 86வது பிறந்த நாள் ஆகும்.இதனை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து தலாய் லாமாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிறந்த நாளில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள தலாய் லாமா, இந்தியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நேர்மை, இரக்கம், அகிம்சை போன்ற இந்தியாவின் மதசார்பற்ற விழுமியங்களில் தனக்கு மிகுந்த மரியாதை ஒன்று என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் அகதியாக வந்து இந்தியாவில் குடியேறினேன். தற்போது இந்தியாவின் சுதந்திரத்தையும் மத நல்லிணக்கத்தையும் முழுமையாக பயன்படுத்துகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்தியர்களுக்காகவே ஆன்மீகப் பணி செய்வேன் என உறுதி கூறுகிறேன். இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை மிகவும் பாராட்டுகிறேன். நேர்மை, இரக்கம், அகிம்சை போன்ற இந்தியாவின் மதசார்பற்ற விழுமியங்களில் எனக்கு மரியாதை உண்டு. இவையே என் பிறந்தநாளுக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கட்டும்.,என்றார்.  

இந்தியாவில் வாழந்து வரும் திபெத்தின் 14வது தலாய் லாமா டென்சின் கியாட்ஸோ ஜூலை 6ம் தேதி 1935ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். பல்வேறு அரசியல் பிரச்சனைகளை அடுத்து 1959ம் ஆண்டில் இருந்து திபெத்தில் இருந்து வந்த தலாய் லாமாவிற்கு இந்திய அடைக்கலம் கொடுத்து வருகிறது. 


Tags : India ,Dalai Lama , தலாய் லாமா
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்